குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே நேற்று இரவு டவ்-தே புயல் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 190 கிமீ., வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளிலிருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. ‘டவ் தே’ என பெயரிடப்பட்ட இந்தப் புயல், அதிதீவிர புயலாகி மாறி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. இந்த புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.