மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
எம்.பி.யாகிறார் அமைச்சர் எல். முருகன்
11:54 September 18
ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
11:20 September 18
எம்.பி.யாகும் சர்பானந்தா சோனோவால்
பாஜக வேட்பாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் எல். முருகன், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலும், சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாமிலும் களம் காண்கின்றனர்.
11:08 September 18
ம.பி.க்கு எல். முருகன் - அஸ்ஸாமுக்கு சர்பானந்தா சோனோவால்
இந்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: சாதி மோதல்... பழிக்குப்பழி... தொடர் கொலை: 8 எஸ்.பி.க்கள் குவிப்பு - நெல்லையில் திக்... திக்...