விஜய் பி நாயர் என்பவர் தனது யூடியூப் சேனலில் பெண்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி, அவரது தோழிகள் சஜ்னா என் எஸ், ஸ்ரீலட்சுமி அரக்கல் ஆகியோர் விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி அவர் மீது கறுப்பு மை பூசினர். அதுமட்டுமல்லாது அவரது லேப் டாப்பையும் சேதப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமிக்கு முன் பிணை
கொச்சி: விஜய் பி நாயர் என்ற யூடியூபரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி உள்பட மூவருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.
Bhagyalakshmi
இதனையடுத்து இருதரப்பினருக்கும் எதிராக தனித்தனியாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரால் விஜய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கியலட்சுமி அவரது தோழிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதனையடுத்து பாக்யலட்சுமி, சஜ்னா என் எஸ், ஸ்ரீலட்சுமி அரக்கல் முன்பிணை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவானது இன்று விசாரிக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் முன்பிணை வழங்கப்பட்டது.