தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2023, 10:29 PM IST

ETV Bharat / bharat

சாவர்க்கர் அவுட்; 'இனி சாவித்ரி பூலே, அம்பேத்கர் கவிதைகளே இடம்பெறும்' - கர்நாடகா அரசு அதிரடி

கர்நாடக அமைச்சரவையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்களில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், இந்துத்துவா சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கார் பற்றிய அத்தியாயங்களை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரூ(கர்நாடகா):சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், ஆட்சிக்கு வந்தது முதல் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அம்மாநில பல்வேறு அதிரடி திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, இன்று (ஜூன் 15) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடபுத்தகங்களில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றும் இந்துத்துவா சித்தாந்தவாதி வி.டி.சாவர்க்கர் உள்ளிட்டோர் பற்றிய அத்தியாயங்களை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு பாடத்திட்டத்தில் சேர்த்த அத்தியாயங்களை நீக்கியும் சாவித்ரி பாய் பூலே(Savitribai Phule) , இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள், மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் (BR Ambedkar) பற்றிய கவிதைகள் குறித்த அத்தியாயங்களி சேர்ப்பதற்கும் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி பாடப் புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்வதாகவும், தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்வதாகவும் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், பாடபுத்தகங்களில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், இந்துத்துவா சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கார் பற்றிய அத்தியாயங்களை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும், இது குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையில் புதிய அத்தியாயங்களை சேர்ப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்ச்சியான வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கல்வித்துறை அமைச்சர் குமார் பங்காரப்பா கூறினார்.

இதையும் படிங்க: ரத்தாகும் பாஜக கொண்டுவந்த 'மதமாற்றத் தடை சட்டம்' - கர்நாடக அரசு முடிவு

கடந்த 2022ஆம் ஆண்டில் கன்னடத்தில் எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி வீர சாவர்க்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த பாட புத்தகத்தில் சாவர்க்கரின் செயல் பரவலான பேசுபொருளாகி இருந்தது.

அந்த குறிப்பிட்ட அத்தியாயத்தில் “சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில் ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும் எனவும், சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்கு செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்” என அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆனால், எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற இந்த வரிகளின் நோக்கத்தை ஒரு சிலர் ஏற்க மறுப்புகளும் ஆதரவுகளும் கிளம்பின. இந்த நிலையில், எட்டாம் வகுப்பு பாடப் புத்தக அத்தியாயத்தில் இடம்பெற்ற இந்த வரிகளின் அர்த்தம் 'நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்' என கூறுகின்றனர். மேலும் இந்த புத்தகத்தில் உள்ள பாடங்கள், கர்நாடகாவில் ரோஹித் சக்ரதீர்த்த பாடநூல் திருத்த குழுவால் திருத்தப்பட்டது.

இதையும் படிங்க:உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்: ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details