தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக சாக்கடையில் மிதந்து வந்த உயிரிழந்த மனித சிசுக்கள்!

கர்நாடக மாநிலம் மூடலகி நகரில் உள்ள சாக்கடைகளில் 7 மனித சிசுக்கள் மிதந்து வந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

By

Published : Jun 24, 2022, 8:41 PM IST

கர்நாடகாவில் சாக்கடையில் மனித சிசுக்கள் கண்டெடுப்பு
கர்நாடகாவில் சாக்கடையில் மனித சிசுக்கள் கண்டெடுப்பு

கர்நாடகா:பெலகாவி மாவட்டம், மூடலகி நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் சிறிய கண்ணாடி ஜார்களில் அடைத்து வைக்கப்பட்ட 7 மனித சிசுக்கள் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்துள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மொத்தம் ஐந்து ஜார்களில் ஏழு கருக்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களை வீசியது யார் என்பது தெரியவில்லை. காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் மகேஷ் கோஹ்னி, ’மூடலகி நகர் பாலத்தின் அடியில், ஐந்து ஜார்களில், ஏழு மனித சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஐந்து மாத மனித சிசுக்கள். இது கரு பரிசோதனை மற்றும் கருவைக் கொல்வது சார்ந்தது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

இந்த மனித சிசுக்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அவை பெலகாவி அறிவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக கொண்டு செல்லப்படும். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details