பெங்களூரு:கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் தோகரி கட்டா கிராமத்தில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தொடர்ந்து பாம்புகளால் தாக்கப்பட்டுவந்துள்ளனர். சுமார் 25 ஆண்டுகளாக தொடரும் இந்த விசித்திர சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கோவிந்தராஜூ என்பவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார். இந்த பாம்பு கடி சம்பவங்கள் அந்த குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய நிலத்தில் விவசாய பணிகள் பார்க்கும்போது நடந்துள்ளன. இதனால் விவசாய பணிகளுக்கு செல்லவே அந்த குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படுகின்றனர். இதனையறிந்த அந்த கிராம மக்களும் அவர்களது நிலைத்தில் விவசாய பணிகளுக்கு வர மறுக்கின்றனர்.