உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சாலையின் மறுபுறம் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. பேருந்தும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து இந்த விபத்தில் பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் பணம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்ற நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் பணம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு