புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இங்கு சென்னை, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே மருத்துவமனையில் வரும் 1ஆம் தேதிமுதல் சிவப்பு ரேஷன் கார்டு கொண்டுவந்தால் மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தங்களது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.