ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜாப் 10 காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலரை, காவல் நிலைய மேற்பார்வையாளர் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்

கிடைத்த தகவலின்படி, ஜாப் 10 காவல் நிலைய மேற்பார்வையாளர் சத்ருக்னா சிங், காவல் நிலையத்தில் தனியாக இருந்த பெண் காவலரிடம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக பெண் காவலர் உயர் அலுவலர்களிடம் கூறியதையடுத்து, மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து சத்ருக்னா சிங்கை பணியிடை நீக்கம்செய்துள்ளார்.
இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "பெண் காவலர் அளித்த புகாரின்பேரில், அவரை முதற்கட்டமாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.