தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீஷெல்ஸ் நாட்டுடனான உறவை வலுப்படுத்த முடிவு' - ஜெய்சங்கர்

விக்டோரியா: இந்தியா- சீஷெல்ஸ் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீஷெல்ஸ் குடியரசுத் தலைவருடன் கலந்துரையாடியுள்ளார்.

By

Published : Nov 29, 2020, 12:38 PM IST

Updated : Aug 9, 2022, 7:28 PM IST

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

சீஷெல்ஸ் நாடு சுற்றுபயணத்தை முடித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீஷெல்ஸ் குடியரசுத் தலைவர் வேவெல் ராம்கலவனிடம் இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோவிட்19 பிந்தைய காலத்தில் இந்தியா-சீஷெல்ஸ் நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சீஷெல்ஸ் குடியரசுத் தலைவர் வேவெல் ராம்கலவனிடம் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் கொள்கையை வகைப்படுத்தும் சாகர் குறித்த இந்தியாவின் பார்வையை சீஷெல்ஸின் உயர் அலுவலர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தொற்று நோய் காலக்கட்டத்தில் மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கிய இந்தியாவை ராம்கல்வன் பாராட்டியதாக குறிப்பிட்டிருந்தனர். சீஷெல்ஸின் நலன்களை இந்தியா ஆதரிப்பதன் மூலம், இரு நாடுகளிடையிலான உறவு அடுத்த கட்டத்தற்கு நகரும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Last Updated : Aug 9, 2022, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details