நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் நரேன் தாஸ் குப்தா எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதில் அளித்தார்.
சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரில் புதிய முதலீடுகள் குறித்த விவரங்களை அளிக்க தெரிவிக்க வேண்டும் என நரேன் குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த நித்தியானந்த் ராய், "2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு, புதிய மத்திய தொழில் திட்டங்களுக்கான வரைவை ஜம்மு காஷ்மீருக்காக உருவாக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தொழில் கொள்கை, ஜம்மு காஷ்மீர் தொழில் எஸ்டேட் வளர்ச்சி கொள்கை, ஜம்மு காஷ்மீர் தொழில் நில ஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த புதிய வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.31,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன." என்றார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. அங்கு நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவந்து, அமைதியையும் வளர்ச்சியையும் நிலைநாட்வே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கூறியிருந்தது.
இதையும் படிங்க:விவசாயி மகன்.. 18 வயதில் ராணுவ பணி.. விபத்துக்கு முன் மனைவியிடம் வீடியோ கால்... உருக்கமான கடைசி நிமிடங்கள்!