தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல் புத்தகத்தை வெளியிட்ட இந்தோ-திபெத் எல்லைப் படை

தனது வரலாற்றை குறிக்கும் முதல் புத்தகத்தை இந்தோ-திபெத் எல்லைப் படை வெளியிட்டுள்ளது.

ITBP
ITBP

By

Published : Aug 8, 2021, 2:24 PM IST

இந்தோ-திபெத்திய எல்லை படை(ITBP) தனது முதல் வரலாற்றுப் புத்தக்கத்தை இன்று (ஆக்.8) வெளியிட்டுள்ளது.

'ITBPஇன் வரலாறு' என்ற தலைப்பில் வெளியான இப்புத்தகம் படையின் அலுவலர்கள், படையினர் அதன் உருவாக்கம் குறித்த வரலாறு ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகிறது.

"இந்தப் புத்தகம் படையினரின் நிர்வாக மற்றும் பயிற்சி வசதிக்கு பெரிதும் உதவும். நீண்ட ஆய்வுக்குப்பின் இந்த 640 புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஐடிபிபி-இன் பங்களிப்பு, சாதனை, நிர்வாக மாற்றங்கள் ஆகியவை குறித்த விரிவாக இந்தப் புத்தகத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என ஐடிபிபி செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஐடிபிபி தலைவர் எஸ்.எஸ். தேஸ்வால் ஆகியோர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'

ABOUT THE AUTHOR

...view details