ஐதராபாத்:யோகாசனம் மனதிற்கும், ஆன்மாவிற்கும் நன்மை பயக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக எல்லா நாட்களிலும் நம்மால் செய்ய இயலாது. ஆகவே தினந்தோறும் யோகாசனம் செய்யாவிட்டலும், நமது வாழ்வின் ஒரு பங்காக யோகாசனத்தை கிடைக்கும் நேரத்தில் பயிற்சி செய்து கொள்ளலாம். எளிமையான சில யோகாசனங்களை செய்வதன் மூலம் மனம் மற்றும் உடலில் பல நன்மைகளைப் பெறலாம். தற்போது சர்வதேச யோகா தினம் நெருங்கி வருவதால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்கான சில ஆசனங்களை காணலாம்.
சவாசனம்:
இந்த யோகா உறங்குவது போல் தோன்றினாலும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சிறந்த ஆசனங்களில் ஒன்றாகும். நமது உடலை ஓய்வெடுக்கும் போது சுவாசத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அப்போது நாம் மன பதற்றத்தில் இருந்து விடுபடலாம். இதயத் துடிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இதனால் உடலுக்கும், மனதுக்கும் நன்மை உண்டாகும். இந்த யோகாசனம் செய்வது மிகவும் எளிது. யோகா பாயில் உங்கள் தலை மற்றும் கைகால்களை தரையில் வைத்து, முதுகு தரையில் படுமாறு படுக்க வேண்டும். மாறாக, வலது அல்லது இடது புறமாக சாய்ந்து படுத்து ஓய்வெடுப்பது மிகவும் வசதியாக இருந்தால் அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
வஜ்ராசனம்:
இந்த உட்கார்ந்த நிலை ஆசனம் முழங்கால்கள், கால் தசைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவுகிறது. முதலில் இந்த ஆசனம் சற்று கடினமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் இந்த நிலையில் அமரும் போது நீண்ட காலத்திற்கு வஜ்ராசன நிலையை எளிதாக வைத்திருக்க முடியும் என்பதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள். உட்காரும்போது முதுகை நேராக நிமிர்த்தி, முழங்கால்களை வளைத்து கால்களை உடலின் கீழ் மடிக்க வேண்டும். பின் கணுக்கால் உள்நோக்கி திரும்ப வேண்டும் மற்றும் கால்விரல்கள் தரையைத் தொட வேண்டும்.
அபனாசனம்: