தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் : இந்தியாவில் அடிமைத்தன முறையை ஒழிக்க செய்யப்பட வேண்டியவை!

சாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், நாடு, சமூகம், பண்பாடு போன்ற அளவுகோள்களில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் , “நாம் யாரும் அடிமையில்லை, நமக்கு யாரும் அடிமையில்லை” என்ற அரசியல் முழக்கத்தை செவிமடுத்த ஐ.நா அவையானது 1986 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அடிமைகள் ஒழிப்பு நாளை அனுசரித்து வருகிறது.

International Day for Abolition of Slavery
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் : இந்தியாவில் அடிமைத்தன முறையை ஒழிக்க செய்யப்பட வேண்டியவை!

By

Published : Dec 2, 2020, 10:37 PM IST

சர்வதேச அளவில் அடிமைத்தனம் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அடிமை வர்த்தகம் முற்றுமுழுதாக மறைந்துவிடவில்லை. அந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. சமூகத்தின் ஏழை எளிய கடைநிலை மக்கள் கூட்டத்தை அது இப்போதும் அச்சுறுத்துகிறது. நவீன உலகில் மனிதக் கடத்தல், கொத்தடிமை முறைமை, குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் அடிமை முறை நீடித்துவருகிறது. அதே நேரத்தில், அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டமும் உலகெங்கிலும் ஓயாது தொடர்கிறது.

நவீன கால அடிமைமுறையின் வடிவங்கள்

கட்டாய உழைப்பு – அரசு, அரசியல் கட்சிகள், போராட்ட இயக்கங்கள், தனிமனிதர்கள் போன்றோர் நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, தண்டனை அச்சுறுத்தலின் கீழ் மக்களை அவர்தம் விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி, வன்முறை பீதியை ஏற்படுத்தி வேலைகளை பெற்றுக் கொள்கின்றன.

இளவயதில் கட்டாயத் திருமணம் – இளம் பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது. பெண்களின் விருப்பமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டு, குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கொத்தடிமை / பிணைக்கப்பட்ட உழைப்பு : இது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ள பரவலான அடிமைத்தனமாகும். வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்கள் பெற்ற கடனை அடைக்க வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு நிலைமைகள் மற்றும் கடன் தொகை இரண்டின் மீதும் கட்டுப்பாட்டை இழக்கின்றனர்.

பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட அடிமைத்தனம்: பாரம்பரிய வடிவ அடிமைத்தனம். அங்கு மக்கள் சொத்தாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்களின் “அடிமை” அந்தஸ்து தாய்வழி வரிசையில் தலைமுறைத் தலைமுறையாகக் கைக்கொள்ளப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர்.

அடிமை குழந்தைகள் : ஒரு குழந்தை வேறொருவரின் லாபத்திற்காக சுரண்டப்படுவதை இவ்வாறு அழைக்கின்றனர். குழந்தை கடத்தல், சிறுவர் போராளிகள், குழந்தை திருமணம் மற்றும் உள்நாட்டு அடிமைத்தனம் ஆகியவை இதில் அடங்கும்.

உண்மை நிலவரம்

உலகம் முழுவதும் 40.3 மில்லியன் மக்கள் இன்றும் நவீன அடிமைத்தன முறைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கட்டாய உழைப்பில் 24.9 மில்லியன் மக்களும், கட்டாய திருமணத்தால் 15.4 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

சர்வதேச அலவில் ஆயிரம் பேரில் 5.4 பேர் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனத்தால் 4 குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர்.

கட்டாய உழைப்பில் 24.9 மில்லியன் மக்களும், தனியார் துறையினரால் 6 மில்லியன் மக்களும் சுரண்டப்படுகிறார்கள்; கட்டாய பாலியல் வன்முறையால் 4.8 மில்லியன் மக்களும், அரசு அலுவலர்களால் திணிக்கப்பட்ட கட்டாய உழைப்பில் 4 மில்லியன் மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார். 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சுழ்நிலையில், குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் - பாலியல் வணிகச் சந்தை வர்த்தகத் துறையில் 99% பேரும், பிற துறைகளில் 58% பேரும் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளாவிய அடிமைத்தன குறியீடும், இந்தியாவும்

கட்டாய உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட மூலப்பொருள்கள் மற்றும் சேவைகளை வணிகத் தளத்தில் தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டங்கள், கொள்கைகள் அல்லது நடைமுறைகளை இன்னும் இயற்றாத ஜி 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

கள்ளச் சந்தையில் மனித உடல் உறுப்பு வர்த்தகம் இந்தியாவில் இன்றும் தொடர்கிறது.

இந்தியாவில் மட்டும் நவீன அடிமைத்தன முறையில் சுமார் 8 மில்லியன் மக்கள் வாழ்ந்து வாழ்கிறார்கள்.

சர்வதேச அளவில், 40 முதல் 49.9 புள்ளிகளுடன் பி குழுவில் இந்தியா நீடித்துவருகிறது.

மீன்பிடித் தொழிலில் நவீன அடிமைத்தனத்தை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா “நடுத்தர இடர்” பட்டியலில் இடம்பிடித்தது.

நவீன அடிமைத்தனம் நடைமுறையில் உள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இணையாக இங்கும் அடிமைமுறை தொடர்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையில் இந்தியாவில் 79 லட்சத்து 89ஆயிரத்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிமைகள் அதிகம் உள்ள 167 நாடுகள் பட்டியலில் (எண்ணிக்கை அடிப்படையில்) 1.83 கோடியுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலகில் உள்ள மொத்த நவீன அடிமைகளில் 58 சதவீதம் பேர் (2.66 கோடி) இந்த 5 நாடுகளில் உள்ளனர்.

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் : இந்தியாவில் அடிமைத்தன முறையை ஒழிக்க செய்யப்பட வேண்டியவை!

பிரச்னை

நாடு முழுவதும் பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் / கொத்தடிமைகள் முறையை ஒழிக்க பல மாநிலங்களில் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

தேசிய அளவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்த ஆய்வில், பிகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 50% பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள்/ கொத்தடிமைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெற்றுள்ள போதிலும் அவை குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் வழக்குகளை பெரும்பாலும் பதிவு செய்வதில்லை என்றும் அறியமுடிகிறது.

பிணைக்கப்பட்ட தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் 1976 (பி.எல்.எஸ்.ஏ) கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டில் 463 வழக்குகளும், 2018 ஆம் ஆண்டில் 778 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பி.எல்.எஸ்.ஏ இன் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை மீதான விசாரணை சுமார் 4.9 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தொடங்குகின்றன.

பி.எல்.எஸ்.ஏ இன் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 84 % உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அதே போல, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பிணைக்கப்பட்ட தொழிலாளர் வழக்குகளை குறைந்தபட்ச ஊதிய மீறல்களாக பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட அமலாக்க முயற்சிகளின் பலவீனம் காரணமாக, 10 மாநிலங்களில் மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அடிமைமுறையை முடிவுக்குக் கொண்டுவர

நிதித்துறை மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை வழங்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனைகளை விரைந்து வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடிமைத்தன முறையை ஒழிக்கவும், மனித-கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கவும் ஒருங்கிணைந்த பணிகளை சட்டம், காவல்துறை மற்றும் அரசின் கண்காணிப்பு அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

தனியார் கடன் வழங்குநர்கள், முதலீட்டாளர்கள் போன்றோரின் வணிக நடைமுறைகளில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு : லண்டன் பங்குச் சந்தை குழுகள், தங்களது ஒப்பந்தங்களில் கடுமையான அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு பிரிவுகளை எடுத்தியப்புகிறது.

அடிமைத்தனத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சுதந்திரத்தை நோக்கி சிறிய அடியெடுத்து வைக்க தைரியம் அளிக்கும் தளத்தை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க :கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்த கேப்டன் அமரீந்தர் சிங்!

ABOUT THE AUTHOR

...view details