நம்மைச் சுற்றிவரும் நான்கு கால் நண்பனை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். வீட்டில் நமது குடும்ப உறுப்பினராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாய்கள், கோபம், சந்தோசம் என நமது அத்தனை உணர்வுகளையும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை.
நாய், பூனை இரண்டும் அதிகம் மக்களால் வளர்க்கப்படும் பிராணிகள் என்றாலும், மனிதர்கள் பூனையை காட்டிலும் நாயையே அதிகம் விரும்புகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
நான்கு கால் நண்பன் அவன்...
பல இடங்களில், வீட்டில் வளர்த்தவர்களாலேயே நாய்கள் சாலையில் தூக்கி வீசப்படுகின்றன. எனவே அனைவரும் நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கொலின் என்ற பெண் 'ஷெல்டி' எனும் நாயைத் தத்தெடுத்துக் கொண்டார்.
அன்றைய தினமான 2004ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26, தொடங்கி இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஆரம்பித்து வைத்ததும் கொலின்தான்.
வீட்டின் காவலாளி
நாய் வீட்டிலிருந்தால் அதனுடைய அனுமதி இல்லாமல் புதிதாக ஒரு பொருள்கூட உள்ளே நுழைய முடியாது. அதற்கு நீங்கள் ஒன்று செய்தால், அதனை பல மடங்கு திருப்பி கொடுத்துவிடும். நன்றி எனும் வார்த்தையின் அர்த்தத்துக்கு நாய்களே ஆகச் சிறந்த உதாரணம்
நாய்கள் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைக் காண்போம்
- நாய்களுக்கு ஒரே நேரத்தில் மூச்சை உள்ளே இழுத்து (breathe in), வெளியே விடும் (breathe out) திறன் உள்ளது.
- சிறந்த வாசனை உணர்வு கொண்டது. நாய் அதன் மூக்கை ஈரப்பதமாக வைத்திட அதன் நாக்கை கொண்டு நக்குகிறது. மூக்கில் ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் தான், அதனால் எளிதாக ரசாயன சேர்மங்களை (chemical compounds) கண்டறிய முடிகிறது.
- மற்ற நாய்களைப் போல் இல்லாமல், பசென்ஜிஸ் (Basenjis), வேட்டை நாய் இனம் (hunting dog) ஆகியவை யாடல் (yodels) ஒலி, வைன்ஸ் (whines) ஒலி போன்றவற்றை உருவாக்குகிறது.
- நாய்களுக்கு ஒரு கண்ணுக்கு மூன்று கண் இமைகள் உள்ளன. மூன்றாவது கண் இமை, நிக்கிடேட்டிங் சவ்வு (nictitating membrane) என்றும் அழைக்கப்படுகிறது. இது பாதுகாப்பை வழங்குகிறது.
- நாய்கள் மனிதர்கள் உடலில் உள்ள நோயை உணரும் சக்தி கொண்டவை.
- நாய்களுக்கு ஒரு காதுக்கு சுமார் 18 தசைகள் உள்ளன. ஆனால், மனிதர்களுக்கு ஆறு மட்டுமே உள்ளன.
- பெரும்பாலான நாய்கள் மிகவும் நல்ல நீச்சல் வீரர்கள்.
சமீபத்தில் ஆய்வு ஒன்றில் நாய்களிடம் புற்றுநோயை அறியக்கூடிய திறன் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. நாய்கள் தொடர்பான இத்தகைய ஆச்சரியப்பட வைக்கக்கூடிய விஷயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.
நிலத்தில் வாழும் உயிரினங்களில் மனிதர்களுடன் இத்தனை அன்போடு பழகக் கூடிய ஒரே நண்பனான நாய்களின் இனத்தைக் காப்போம் என இந்த நாளில் உறுதியேற்போம்.
இதையும் படிங்க:குடும்பத்தினரைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரிழந்த நாய்!