தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

200 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன - மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியைக் கடந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

mark
mark

By

Published : Jul 17, 2022, 8:24 PM IST

டெல்லி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு முதல் நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியைக் கடந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 98 விழுக்காடு பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 90 விழுக்காடு பேருக்கு இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில், 82 விழுக்காடு பேருக்கு ஒரு டோஸ் மற்றும் 68 விழுக்காடு பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 81 விழுக்காடு பேருக்கு முதல் டோஸும், 56 விழுக்காடு பேருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 200 கோடி டோஸ்களுக்கும் மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், சுமார் 49 விழுக்காடு கரோனா தடுப்பூசி டோஸ்கள் பெண்களுக்கும், 51. 5 விழுக்காடு தடுப்பூசி டோஸ்கள் ஆண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன. ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், லட்சத்தீவுகள், சண்டிகர், தெலங்கானா மற்றும் கோவாவில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 34 கோடியே 41 லட்சம் டோஸ்களும், மகாராஷ்டிராவில் 17 கோடியே 5 லட்சம் டோஸ்களும், மேற்குவங்கத்தில் 14 கோடியே 40 லட்சம் டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5 கோடியே 63 லட்சத்து 67ஆயிரத்து 888 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் நீதித்துறை மீது கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details