தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தாண்டிய இந்தியா

அமெரிக்காவில் இதுவரை 32.33 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 32.36 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Health Ministry
Health Ministry

By

Published : Jun 28, 2021, 5:29 PM IST

Updated : Jun 28, 2021, 7:03 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக முக்கிய புள்ளிவிவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கையின்படி, இந்தியா தற்போது அமெரிக்காவைத் தாண்டியுள்ளது.

வேகமெடுத்துள்ள தடுப்பூசி திட்டம்

அமெரிக்காவில் இதுவரை 32.33 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 32.36 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 2020 டிசம்பர் மாதம் 8ஆம் தேதியே தொடங்கிய நிலையில், இந்தியாவில் 2021 ஜனவரி 16ஆம் தேதிதான் தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி திட்டம் சுணக்கமாக நடைபெற்ற நிலையில், கடந்த 15 நாள்களில் திட்டம் வேகமெடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் நான்கு கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Last Updated : Jun 28, 2021, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details