டப்ளின் :இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் ட்க்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 20ஆம் தேதி அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்திலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.