தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கந்தகார் தூதரகத்தை காலி செய்த இந்தியா

தாலிபான் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கந்தகார் தூதரகத்தை இந்தியா காலி செய்துள்ளது.

By

Published : Jul 11, 2021, 3:13 PM IST

India
India

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியுள்ள நிலையில், அங்கு மீண்டும் தாலிபானின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள பல பிராந்தியங்களை தாலிபான் கைபற்றி ஆப்கான் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானின் முக்கிய மாகாணமாக கந்தகார் பகுதியில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா காலி செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்குள்ள தூதரக அலுவர்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் திரும்பியுள்ளனர். அதேவேளை, காபூலில் உள்ள தூதரகத்தை மூடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை எனவும் வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க:ஆப்கானை கட்டமைப்பது அமெரிக்காவின் பொறுப்பல்ல - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details