தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19: இந்தியாவில் 10 விழுக்காடுக்கும் கீழ் குறைந்த பாசிட்டிவிட்டி ரேட்

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக பாதிப்புத்தன்மை குறைந்துவரும் நிலையில், தற்போது டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 10 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ளது.

By

Published : May 25, 2021, 7:00 PM IST

Published : May 25, 2021, 7:00 PM IST

India
India

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு மே மாதத்தில் உச்சமடைந்தது. நாள்தோறும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிய நிலையில், நோய் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரமாக குறைந்துவருகிறது.

இன்றைய புள்ளிவிவரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 427 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் செய்யப்பட்ட மொத்த பரிசோதனை 20 லட்சத்து 58 ஆயிரத்து 112ஆக உள்ளது. இதன்மூலம், ’டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்’ எனப்படும் பரிசோதனைக்கான தொற்று பாதிப்பு விழுக்காடு 9.54 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

மே மாதத் தொடக்கத்தில் இது சுமார் 20 விழுக்காட்டை ஒட்டியிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் உச்சம் கண்ட இரண்டாம் அலை, மெல்லத் தணிந்து வருவது தெரிகிறது.

தடுப்பூசி நிலவரம்

தடுப்பூசித் திட்டம் தொடர்பான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் இதுவரை 19 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 999 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 24 லட்சத்து 30 ஆயிரத்து 236 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரோனா பாதித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details