தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2021, 8:04 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் 20 கோடி இலக்கை தாண்டியது!

இந்தியாவில் இதுவரை 20.06 கோடி கோவிட.-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 vaccination
COVID-19 vaccination

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மூன்றாம் கட்டத்தில் உள்ளது. மே ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை இன்று (மே.26) இருபது கோடியைத் தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ள விவரத்தின்படி, இதுவரை 20 கோடியே ஆறு லட்சத்து 62 ஆயிரத்து 456 தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் 15.71 பேருக்கு முதல் டோசும், 4.35 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் இந்த 20 கோடி தடுப்பூசி இலக்கை அமெரிக்கா 124 நாள்களில் எட்டிய நிலையில், இந்தியா 130 நாள்களில் எட்டியுள்ளது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 42 விழுக்காடு மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், 45 வயதுக்கு மேற்பட்டோரில் 34 விழுக்காடு பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது என அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:நாடு முழுவதும் 11,717 பேருக்குப் பூஞ்சை தொற்று பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details