சூரத்:குஜராத் மாநிலம், சூரத் அடுத்த அம்ரோலி பகுதியைச் சேர்ந்தவர், கணேஷ் ஷவாய். ஒடிசாவைச் சேர்ந்த கணேஷ், தன் இரு மகன்களுடன் சூரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். கணேஷ் ஷவாயின் மூத்த மகன் முகாபதிர் வைர தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் ஷங்கர் சற்று மனநிலை குன்றியவர் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, வீட்டின் அறையில் உள்ள விளக்கை அணைத்தது தொடர்பாக கணேஷ் ஷவாயின் மற்றும் மூத்த மகன் முகாபதிர் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்த நிலையில் கீழே கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் முகாபதிர் பலமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.