இது தொடர்பாக இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடமேற்கு காற்று வீச்சு காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை அடுத்த 3 நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நீடிக்கும் வாய்ப்புள்ளது.
அதேபோல, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி சூழும். இதனால், அம்மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மூன்று நாள்களுக்கு கடுமையான குளிர் இருக்கும். பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனுடன் இணைந்த மாலத்தீவு பகுதியில் குறைந்த அழுத்த வெப்பமண்டல நீடிக்கிறது. அதன் காரணமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கல், கேரளா, லட்சத்தீப் பகுதிகளில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பொழியும். அதன்பிறகு இந்த பகுதிகளில் படிப்படியாக மழை பொழிவுக் குறையும்.
2021 ஜனவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கல், கேரளா, மாகே, கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளான ராயலசீமா, யானம், தெற்கு உள்ளக கர்நாடகாவின் அருகிலுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொழிவு நிறைவடையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :காஷ்மீரில் 270 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக தகவல்!