மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள சுவேந்து, கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் வெற்றிபெற்றவர். சுவேந்து அதிகாரிதனது தொகுதியில் அவரின் முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான மம்தாவை எதிர்கொள்வது, அங்குள்ள அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.