தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என்னது பிரியாணி பிடிக்கலையா...' வாடிக்கையாளர்களுக்கு அடி உதை

ஹைதராபாத்: பிரியாணி நன்றாக இல்லை எனக் கூறிய வாடிக்கையாளர்களை உணவக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Biryani i
ஹைதராபாத்

By

Published : Jun 17, 2021, 8:17 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மைலார் தேவ் பல்லியில் மேஃபில் உணவகம் இயங்கிவருகிறது. இங்கு நேற்று, மட்டன் பிரியாணி சாப்பிட வந்த இருவர், பிரியாணி நன்றாக இல்லை என உணவக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த ஊழியர்கள், சாப்பிட வந்த இளைஞர்களைப் பலமாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

வாடிக்கையாளர்களுக்கு அடி உதை

இதையடுத்து, வாடிக்கையாளர்களைத் தாக்கிய உணவக ஊழியரைக் கைதுசெய்த காவல் துறையினர், ஊரடங்கில் உணவகத்தைத் திறக்கக் கூடாது என எச்சரித்து சென்றனர். மேலும், சாப்பிட வரும் இளைஞர்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details