தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2022, 6:42 AM IST

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 26 - இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூலை 26) ராசிபலன்களை இங்கு காணலாம்.

TODAY HOROSCOPE: ஜூலை 26 - இன்றைய ராசி பலன்
TODAY HOROSCOPE: ஜூலை 26 - இன்றைய ராசி பலன்

மேஷம்:இன்று, அழகான மற்றும் கவர்ச்சிகரமான பொருட்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் அது போன்ற பொருட்கள் தொடர்பான வர்த்தகத்தை தொடங்கும் சாத்தியக்கூறும் உள்ளது. ஆனால் இது குறித்து முடிவு எடுக்க முடியாத நிலை இருக்கும். எனினும் மற்ற யோசனைகளையும் கருத்தில் கொண்டு செயல்படவும்.

ரிஷபம்:இன்றைய தினத்தில், உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கக் கூடும். எனினும், உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்கள் உடன் நேரம் செலவழிப்பீர்கள். மற்ற அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டு, உங்களுக்கு ஏற்ற விஷயங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் இது.

மிதுனம்:இன்று, குதூகலம் மற்றும் ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு இருக்கும் நேர்மறையான எண்ணங்கள் காரணமாக நீங்கள் வெற்றிகளை அடைவீர்கள். உங்களுக்குப் பிடித்த வகையில் செயல்பட்டு, உங்களுக்கு விருப்பமான பணிகளை எடுத்துக் கொள்வீர்கள். இன்று வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதற்கு பலன் கிடைக்கும்.

கடகம்:குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்கள் உடன் கவனமாக பழகவும். சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர் கொள்ளவும்.

சிம்மம்:உங்களுக்கு இன்று, தன்னம்பிக்கை உணர்வு அதிகம் இருக்கும். பணியிடத்தில் வேலை தொடர்பான விஷயங்களில் உறுதியான முடிவுகளை எடுக்கும் திறன் உங்களிடம் இருக்கும். பணிகளை நிறைவு செய்வதில் உண்டாகும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றியடைவீர்கள்.

கன்னி:இன்று நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ள நேரம் செலவழிக்க வேண்டும். பணியிடத்தில் சில கசப்பான உணர்வுகள் ஏற்படக்கூடும். அதனால் எச்சரிக்கையாக இருந்து, பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. காதல் உறவை பொருத்தவரை, புதிய காதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

துலாம்:நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்ட பிரச்சனைகள், இன்று நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்துக்கு வெளியிலோ தீர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்று வேலைப்பளு குறைவாக இருக்கலாம். சில பிரச்சனையான சூழ்நிலைகளுக்கு, நீங்கள் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்:நீங்கள் இன்று, மிகச் சரியாக வேலை பார்க்கும் திறன் உடையவர் என்று போற்றப்படுவீர்கள். பணியில், குறிப்பிட்ட நெறிமுறைகளை மிகச் சரியாக பின்பற்றி, நேரம் தவறாமல் நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு, ஒரு உதாரணமாக திகழ்வீர்கள்.

தனுசு:இன்று, சிந்தித்து செயல்படுவது நல்லது. மன்மதன் உங்களை நோக்கி அம்பு எய்த தயாராக இருக்கிறான். காதல் உணர்வு காரணமாக நீங்கள் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். ஆனால், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களது கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளவும்.

மகரம்:நீங்கள் தேனீயை போல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால், உங்களைப் பற்றி நினைக்க உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் கற்பனைத் திறனுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் வேலை அதிகமிருப்பதால், அதற்கான சுதந்திரம் இருக்காது. நேர நிர்வாகம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு செயல்படுவதால், வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

கும்பம்:இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சிறியது முதல் பெரியது வரை உங்களது அனைத்து திட்டங்களும், நடைமுறைக்கு வரும். உங்கள் பாதையில் தடைகள் ஏதும் இருந்தால் மனம் தளர வேண்டாம்; சோதனைகள் அனைத்தையும் கடந்து, நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்:கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால், புதிய திட்டங்கள் எதையும் இன்று தொடங்குவது நல்லது அல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்டத்திலும், பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வர்த்தகத்தில் இருப்பவர்கள், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடவுளின் ஆசியால், உங்களது வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

இதையும் படிங்க:WEEKLY HOROSCOPE: ஜூலை 4ஆவது வாரத்திற்கான ராசிபலன்...

ABOUT THE AUTHOR

...view details