தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2021, 6:12 AM IST

ETV Bharat / bharat

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 19

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

இன்றைய நாளில், உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்துகொள்வீர்கள். மற்றவர்களும் உங்களை, கவனித்துப் பார்த்தால், நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியடைந்து அனைவரையும் கவர்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ஒரு கண்காணிப்பாளராக, நீங்கள் கூட்டாளிகளுக்குச் சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஒரு தலைமைப் பதவியில் இருக்கும் நீங்கள், அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான காலநிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மிகுந்த ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வாழ்க்கையின் உங்கள் அரிய தருணங்களை நினைத்துப் பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பீர்கள். எனினும் தனிப்பட்ட விஷயம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் ஒரு பொருளை விற்கவும் வாங்கவும் இன்று பொருத்தமான நாள் ஆகும்.

கடகம்

அலுவலகத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்தவருடன், நேரத்தைச் செலவிடுவதற்காகப் பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்

உங்களுக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத் துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள்.

கன்னி

நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனத்தை ஒருமுகப்படுத்தி, செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொளுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்

இன்று வேலைப்பளு அதிகம் இருக்கும். அதன் காரணமாக நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். மோசமான சூழ்நிலைகள் மற்றும் கவலைகள் காரணமாக உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். எனினும் மன உறுதியுடன் சூழ்நிலையைத் தைரியமாக எதிர்கொண்டால், நிலைமை சீராகும்.

விருச்சிகம்

நீங்கள் இன்று கடுமையாக உழைப்பீர்கள். அத்தோடு கூடவே நீங்கள் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வது நல்லது. வீட்டு வேலைகளில் ஈடுபட இன்று உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல், சுத்தம் என மன விருப்பப்படி வீட்டு வேலைகளில் ஈடுபடவும். குடும்பத்தின் மூலம் கிடைக்கும் சந்தோஷங்கள், வேலை தொடர்பான கவலைகள் நீங்கும்.

தனுசு

உங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை, நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம்போல் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்

பல்வேறு வழிகளிலிருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்றச் செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள்.

கும்பம்

உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைக்கூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் புதிய சொத்துகள் வாங்கக்கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்

ஒரு நல்ல நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாகச் செய்து முடித்துவிடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details