கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (மே 14) இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சேரங்கி கடலோரப் பகுதி தொடர்ச்சியான மழையினால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், அங்கு கடற்கரையில் உள்ள மூசா எனும் இரண்டு மாடி குடியிருப்புக் கட்டடம், 'டாக் டே' புயலின் தாக்கத்தினாலும்; கடல் அலையின் தாக்கத்தின் காரணமாகவும் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, அங்கிருந்த குடும்பத்தினர் சம்பவத்திற்கு முன்னரே வெளியேற்றப்பட்டார்கள். இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சேரங்கி பகுதிகளில் பல வீடுகள் இடைவிடாத மழையினாலும், பலத்த காற்றினாலும் கடும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன. பேரழிவு நிவாரணத்திற்காக 35 ராணுவ வீரர்கள் அங்கு பணி செய்ய நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் அங்கு கனமழை எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
காசர்கோட்டில் குடியிருப்பு கட்டடம் இடிந்துவிழும் காட்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன, பயிர்களும் கடும் சேதமடைந்துள்ளன. நேற்றிரவு(மே 14) வெள்ளரிக்குண்டு தாலுகாவில் 63 மி.மீ மழையும், பீலிகோட் பகுதியில் 85.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: அமலுக்கு வந்த வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை - மாற்றமா? ஏமாற்றமா?