ரோஹ்டக்(ஹரியானா): ஹரியானா மாநிலத்தில் ரோஹ்டக் நெடுஞ்சாலையில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (மே22 ) பாடகி சங்கீதாவின் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சங்கீதாவின் நண்பர்கள் ரவி மற்றும் அனில் ஆகியோர் கொலையாளிகள் தெரியவந்தது. முன்னதாக சங்கீதாவின் உறவினர்கள் கடந்த மே 11 முதல் அவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறையினர், ‘விசாரணையில் சங்கீதாவின் நண்பர்களான அனில் மற்றும் ரவி ஆகியோர் இணைந்து இந்த படுகொலையை செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஜவார்பூர் காவல்நிலையத்தில் IPC பிரிவு 365 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.