தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2022, 1:16 PM IST

ETV Bharat / bharat

ஹரியானா முதலமைச்சர் மாற்றம் என போஸ்டர்கள்.. கட்டார் பதிலடி என்ன?

யார் முதலமைச்சராக இருந்தாலும் பாஜக மக்களுக்காக வேலை செய்யும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

opposition
opposition

கர்னல்: ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரை மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் நேற்று(டிச.12) ஹரியானா மாநிலம் கர்னலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தான் மாற்றப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசிய எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், "சிலர் சமூக வலைதளங்கள் மூலமாகவே முதலமைச்சர்களை மாற்றி விடுகிறார்கள். அவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு இதை செய்கிறார்கள். யார் முதலமைச்சராக இருந்தாலும், பாஜக மக்களுக்காக வேலை செய்யும்.

பாஜகவில் தனிமனிதர்களைப் பொறுத்து எதுவும் மாறுவதில்லை, நாங்கள் எப்போதும் இணைந்து செயல்படுவோம். நாங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக முதல்வர்களை தேர்வு செய்வது இல்லை. இதுபோன்ற முடிவுகள் சமூக வலைதளங்களில் பேசப்படும் வதந்திகளைப் பொறுத்து எடுக்கப்படுபவை அல்ல" என்றார்.

இதையும் படிங்க:'அரசியல் சாசனத்தை காப்பாற்ற மோடியைக் கொல்ல வேண்டும்' - காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சால் சர்ச்சை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details