தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து - கடினமான பிரிவில் இந்தியா!

இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஜூனியர் மகளிர் கால்பந்து கோப்பை
ஜூனியர் மகளிர் கால்பந்து கோப்பை

By

Published : Jun 24, 2022, 7:47 PM IST

வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் புபனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

16 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில் எந்த அணி எந்த அணியுடன் மோதும் என்பதை முடிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ டிரா ( draw ) பிஃபாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமெரிக்க கால்பந்து வீராங்கனை ஹீதர் ஓ'ரெய்லி , நியூசிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி ஹெர்பெர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டு டிரா-ஐ (draw) தேர்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றள்ளது. குரூப் ஏ-வில் பிரேசில், மொராக்கோ , அமெரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் ஜெர்மனி , நைஜீரியா, சிலி, நியூசிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன.

குரூப் சி பிரிவில் ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, சீனா ஆகிய அணிகளும் குரூப் டி பிரிவில் ஜப்பான், டன்ஸானியா, பிரான்ஸ், கனடா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

போட்டி நடத்தும் நாடான இந்தியா, அக்டோபர் 11ஆம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details