தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'படித்து பட்டம் பெற்றதற்காக இளைஞர்களை துன்புறுத்தும் அரசு' - சாடும் ராகுல்

"இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் பார்த்துக் கொண்டு, படித்து பட்டம் பெற்ற இந்திய இளைஞர்களை மத்திய அரசு துன்புறுத்தி வருகிறது" என ராகுல் சாடியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Mar 17, 2021, 2:41 PM IST

இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், படித்து பட்டம் பெற்ற காரணத்திற்காக அரசு இவர்களுக்கு அபராதம் விதித்து துன்புறுத்துகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

முன்னதாக பாஜக தலைவர்களின் கல்விப் பட்டங்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் "நாட்டில் படித்த இளைஞர்கள் கடுமையான வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகின்றனர். இந்திய அரசு, நம் இளைஞர்கள் படித்து பட்டம் பெற்ற காரணத்திற்காக, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களுக்கு அபராதம் விதித்து துன்புறுத்தி வருகிறது" என ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தன் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல், ஐஐஎம்மில் 60 விழுக்காடு ஓபிசி, எஸ்சி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்த ஊடக அறிக்கையையும் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:’பங்கபந்து முஜ்பூர் ரஹ்மான்’ இந்தியர்களுக்கும் நாயகன்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details