ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயர மலையான கிளிமஞ்சாரோவில், இந்திய தேசியக் கொடியை நட்ட 23 வயதான உத்தரப் பிரதேச இளைஞர் நிதிஷ் முடிவுசெய்துள்ளார்.
வரும் குடியரசு தினத்தில், இதனைச் செய்திட அவர் முடிவெடுத்துள்ளார். இவர் ஏற்கனவே, கடந்த 2018இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
மலையேறுவதில் வல்லவராகத் திகழும் நிதிஷ், வரும் ஜனவரி 18ஆம் தேதி ஆப்பிரிக்கா புறப்படவுள்ளார். பஞ்சாப், ஹரியானா அரசைப் போலவே மலை ஏறுபவர்களுக்கு உத்தரப் பிரதேச அரசும் நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "எனக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. கோரக்பூர் கின்னார் அகாதா அமைப்பைச் சேர்ந்த மகாமண்டலேஸ்வர் (திருநங்கைகள்), கிரண் நந்த் கிரி பாபா எனக்குப் பண உதவி வழங்கியுள்ளனர்.
இந்தப் பயணத்திற்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. இப்போதுவரை, 2 லட்சத்து 80 ரூபாய் சேகரித்துவிட்டேன். சமூக ஆர்வலர்கள் பலர் எனக்கு உதவ முன்வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.