தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2022, 11:02 AM IST

ETV Bharat / bharat

புக்கர் விருது பெற்ற முதல் இந்தி மொழி நாவல்- எழுத்தாளர் கீதாஞ்சலிக்கு குவியும் பாராட்டு!

இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் இந்தி நாவல் ‘Ret Samadhi' என அழைக்கப்படும் 'Tomb of Sand' நாவலுக்கு புக்கர் விருது கிடைத்துள்ளது.

புக்கர் விருது பெற்ற முதல் இந்தி மொழி நாவல்- எழுத்தாளர் கீதாஞ்சலிக்கு குவியும் பாராட்டு!
புக்கர் விருது பெற்ற முதல் இந்தி மொழி நாவல்- எழுத்தாளர் கீதாஞ்சலிக்கு குவியும் பாராட்டு!

லண்டன்:இந்தியாவைச் சேர்ந்த கீதாஞ்சலி ஸ்ரீ முதன் முறையாக சர்வதேச சிறந்த புத்தகத்திற்கான விருதான புக்கர் விருதை அவரது நாவலுக்காக பெற்றுள்ளார். இவரது நாவல் இந்தியில் Ret Samadhi எனவும் ஆங்கிலத்தில் இது மொழி பெயர்க்கப்பட்டு 'Tomb of Sand' எனவும் பெயரிடப்பட்டது. இந்நிலையில் கீதாஞ்சலி நேற்று(மே 26) லண்டனில் நடந்த புக்கர் விருது விழாவில் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த நாவல் ஒரு தவிர்க்க முடியாத ஒரு புத்தகம் என தேர்வாளர்கள் கூறினர். விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ49.09 லட்சம் பரிசுத் தொகையும் கொடுத்துள்ளனர். இந்த தொகையை கீதாஞ்சலி அவரது நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டெய்ஸி ராக்வேல்லுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த நாவல் 80 வயதுடைய ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்த விருது பெற்து குறித்து கீதாஞ்சலி பேசுகையில், இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன் என கூறினார். நாவலில் கீதாஞ்சலியின் காட்சி வர்ணனை சிறப்பாக உள்ளது என புகழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் உட்பட இந்தியர்கள் நால்வருக்கு புலிட்சர் விருது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details