தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலர் தினத்தில் உலகெங்கும் ரோஜாக்களை அனுப்பிய பெங்களூரு கார்டன் சிட்டி!

பெங்களூரு: காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள 41 இடங்களுக்கு சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் கிலோ ரோஜாக்கள் பெங்களூரு கார்டன் சிட்டியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

roses
ரோஜாக்கள்

By

Published : Feb 16, 2021, 6:38 PM IST

கர்நாடக மாநிலத்தில், கரோனா காரணமாக ரோஜா பூ விற்பனை கடுமையாக சரிந்திருந்தாலும், காதலர் தினத்தில் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 41 இடங்களுக்கு சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் கிலோ ரோஜாக்கள் கார்டன் சிட்டியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு சர்வதேச விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், 1 லட்சத்து 70 ஆயிரம் ரோஜாக்கள் சர்வதேச அளவிலும், 1 லட்சத்து 3 ஆயிரம் ரோஜாக்கள் இந்தியாவிலுள்ள பல நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், லண்டன், குவைத், மலேசியா, லெபனான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் மும்பை, கொல்கத்தா, அலகாபாத், பாக்தோரா, சண்டிகர், ஜெய்ப்பூர், சென்னை உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கும் ரோஜாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தென் இந்தியாவில் ஓசூரும், பெங்களூருவும் ரோஜா உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்தியாவில் ரோஜா ஏற்றுமதில் கார்டன் சிட்டி முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க:'நிலாவில் நிலம்... வானில் நட்சத்திரம்' நிஜத்திற்கு அப்பாற்பட்டதை பரிசாக வழங்கிய காதலன்!

ABOUT THE AUTHOR

...view details