டெல்லி: கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கமும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.
இவற்றில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். இதனையடுத்து, இவர்கள் மூவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், இவர்கள் மூவரும் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.