லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம், தரியாய் கிராமத்தில், திங்கள்கிழமை (ஜுன்.14) வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை, காலை 7.30 மணியளவில் அருகில் மூடப்படாமல் இருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் முதற்கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தையை மீட்டெடுப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும், மீட்புப் பணியில் களமிறங்கினர்.
மீட்புப் படையின் விடா முயற்சி மீட்புப் பணி நீடித்ததால், குழியில் சிக்கித்தவிக்கும் சிறுவனுக்குக் குழாய் மூலம் ஆக்ஸிஜன், குளுக்கோஸ் போன்றவை கொடுக்கப்பட்டது.
9 மணி நேரப் போராட்டம்
தொடர்ச்சியாக அருகில் மற்றொரு குழியைத் தோண்டுவது போன்ற வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மீட்புப் படையினர், சுமார் 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு குழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் சோர்வாகக் காணப்பட்டதால், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீட்புப் படையினருக்கு, கிராமவாசிகளும், குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர். சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வைப் போன்று தமிழ்நாட்டில் திருச்சி மணப்பாறை அருகே சுஜித் என்னும் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து மீட்புப்படையினரின் கடும்போராட்டத்திற்குப் பின், மீட்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:வெள்ளை மான் புகைப்படம்