தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சர் கௌரியம்மா காலமானார்

திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஆர். கௌரியம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 102.

முன்னாள் அமைச்சர்  கே.ஆர். கௌரியம்மா
former Kerala minister KR Gowriamma

By

Published : May 11, 2021, 12:08 PM IST

ஜனாதிபத்திய சம்ரக்ஷனா சமிதி கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர். கௌரியம்மா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கௌரியம்மாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (மே.11) உயிரிழந்தார். அவருக்கு வயது 102. கே.ஆர். கௌரியம்மா, கேரள மாநிலத்தின் முதல் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். மூன்று தலைமுறைகளுக்கு அறிமுகமான இவர், கடந்த 1957ஆம் ஆண்டு கம்யூனிச அரசில் வருமானத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

கேரளாவின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவரான டி.வி. தாமஸை மணந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறி ஜனாதிபத்திய சம்ரக்ஷனா சமிதி என்ற பெயரில் கட்சி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பூகம்பத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வீடு!

ABOUT THE AUTHOR

...view details