கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. பிரம்மபுத்திரா, கொபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்டங்களை சேர்ந்த 652 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டன. 16 ஆயிரத்து 645 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கின. 300 வீடுகள் மூழ்கின.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 7 மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.