தமிழ்நாடு

tamil nadu

BHEL மற்றும் மாருதி நிறுவன முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தொழில் சிறந்த திருப்புமுனை நபருக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற பிரபலமான BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 97.

By

Published : Jun 27, 2022, 10:14 AM IST

Published : Jun 27, 2022, 10:14 AM IST

Updated : Jun 27, 2022, 10:36 AM IST

BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்
BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நாட்டின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான SAIL இன் முன்னாள் தலைவர் வி கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன்26) சென்னையில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு சந்திரா மற்றும் ஜெயக்கார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் கருவேலி எனும் ஊரில் பிறந்த அவர், இரண்டாம் உலகப் போரின் போது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் முன்னதாகவே, விமானநிலையங்களில் தொழில்நுட்ப வல்லுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1954 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மின் திட்டங்களுக்குப் பொறுப்பான திட்டக் கமிஷனுக்கான அங்கீகாரத்தை கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கினார்.

மாருதியின் தலைவரானபின் அவர் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் நவீன யுகத்தை அறிமுகப்படுத்தினார். மாருதி 800 இன் அறிமுகம் மூலம் வாகன சந்தையை நிரந்தரமாக மாற்றியமைத்தார்.இந்நிலையில் இவரது தொழிலில் இவர் புரிந்த சாதனைகளுக்காக அரசு இவருக்கு பத்ம விருதுகளை அளித்து கவுரவித்தது.

ராகுல் காந்தி இரங்கல்:கிருஷ்ணமூர்த்தியின் இறப்புக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டரில், "பத்ம விபூஷன் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது" எனவும், கிருஷ்ணமூர்த்தி உண்மையான அர்த்தத்தில் ஒரு தேசத்தை கட்டியெழுப்பியவர் மற்றும் BHEL, Maruti and Steel Authority of India (SAIL) மூலம் அவரது புகழ்பெற்ற மரபு நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:Watch: இப்படி ஒரு சாண்ட்விச்சை பார்த்ததுண்டா? முன்னாள் முதலமைச்சர் வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி!

Last Updated : Jun 27, 2022, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details