மேஷம்: துரித முடிவுகளை அந்த இடத்திலேயே எடுக்கும் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், உங்களுடைய முடிவுகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். பிறரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. அதிலும், நிதி தொடர்பான விஷயமாக இருந்தால் முடிவெடுப்பதற்கு முன் உரியவர்களிடம் ஆலோசனையைப் பெறலாம்.
ரிஷபம்: எளிதான, கவலையற்ற நாள் உங்கள் முன் இருக்கிறது. எந்தவொரு வருத்தமோ அல்லது கவலையோ இன்றைக்கு ஏற்படாது. எனினும், சக்திக்கு மீறி ஒரு நேரத்தில் பல விஷயங்களை நீங்கள் கையாள வேண்டியிருந்தாலும் பாராட்டை பெறாமல் போவதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளுங்கள். விஷயங்களை மிகைப்படுத்த வேண்டாம். யதார்த்தமாகவும், நியாயமாகவும் இருக்க முயற்சிக்கவும்.
மிதுனம்: தினசரி வேலைகளில் இருந்து ஒரு இடைவெளி எடுத்து கொள்ளலாம். புத்துணர்வு பெற இன்ப சுற்றுலா மேற்கொள்ளலாம். எதிர்பாலினத்தவரிடமிருந்து உங்களுக்கு இயல்பாகவே ஆதரவு கிடைக்கும். யாரையாவது காதலித்தால், அது தொடர்பான நடவடிக்கையை இன்று எடுப்பீர்கள். மாலை நேரத்தில் தியானம் செய்வது அல்லது உங்களை உற்சாகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம்: சிறந்த மற்றும் விதிவிலக்கான ஒரு நாள் உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளை நடத்தும் போது வியாபார அறிவும், நுணுக்கமும் உதவியாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பின் திறன்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னதாகவே வெளிப்படக்கூடும், அது ஒரு ஆர்டரை நிறைவு செய்வதாகவோ அல்லது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவோ அல்லது அவற்றை விற்பனை செய்வதாகவோ இருக்கலாம்.
சிம்மம்: அனைத்து சவால்களையும் தடைகளையும் நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமூகமாக தொடரும்.
கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்பவர் என்றாலும், அழுத்தமோ அல்லது கஷ்டமோ இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது.