தமிழ்நாடு

tamil nadu

68 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் வீண் - ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

நியூயார்க்: கடந்த 2019ஆம் ஆண்டு, 68 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக ஐநா அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Mar 6, 2021, 4:42 PM IST

Published : Mar 6, 2021, 4:42 PM IST

உணவு பொருள்கள்
உணவு பொருள்கள்

ஐநா சுற்றுச்சூழல் திட்டம், விராப் அமைப்புடன் இணைந்து, உணவுப் பொருள்கள் எந்தளவிற்கு வீணடிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2019ஆம் ஆண்டு, உலகளவில் 931 டன் உணவு பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வீடுகளில் 61 விழுக்காடு, உணவகங்களில் 26 விழுக்காடு எனஉணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "உற்பத்தி செய்யப்பட்ட மொத்த உணவுப் பொருள்களில் 17 விழுக்காடு வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருள்களின் எடையானது தலா 40 டன் எடையுள்ள 23 மில்லியன் டன் டிரக்குகளுக்கு சமமாகும். பூமியை ஏழு முறை வட்டமிட இந்த உணவுப் பொருள் போதுமானதாக இருக்கும்.

இந்தியாவில் ஓராண்டுக்கு தனி நபர் ஒருவர் 50 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்களை வீணடிக்கிறார். அதேபோல், அமெரிக்காவில் ஓராண்டுக்கு தனி நபர் ஒருவர் 59 கிலோ எடை உணவுப் பொருள்களை வீணடிக்கிறார்" என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details