தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகனுக்காக கண்ணீர் விட்ட யானை: நெகிழவைக்கும் காட்சி!

தன்னை போற்றிப் பாதுகாத்து வளர்த்த பாகனின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத ’பிரம்மதத்தன்’ எனும் யானை, அவரின் உடலைப் பார்த்து அழும் காட்சி காண்போரின் மனதை உருக வைத்துள்ளது.

பாகன் இறப்பு அழுத யானை, அழுத கேரள யானை, elephant crying, kerala elephant crying video, பாகனுக்காக கண்ணீர் விட்ட யானை, யானை அழுகை, elephant crying tamil, பிரம்மதத்தன் யானை, ஓமனசேட்டன் பாகன்
பாகனுக்காக கண்ணீர் விட்ட யானை

By

Published : Jun 4, 2021, 11:24 PM IST

கோட்டயம் (கேரளா): பாகனின் இறப்பைத் தாங்க முடியாமல் யானை ஒன்று அழுத காட்சி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

”மனிதர்களிடம் காட்டும் அன்பில், சிறிதளவேனும் விலங்குகளிடம் காட்டியிருந்தால் அவை நம்மிடம் காட்டும் நன்றி விசுவாசம் காலத்திற்கும் நிலைத்திருக்கும்” என்று நம் பெற்றோரே சில நேரங்களில் சொல்லுவதுண்டு.

அந்த வகையில் ஒரு நிகழ்வு கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்தேறியுள்ளது. ஓமனசேட்டன் (74) என்பவர் 60 ஆண்டுகளாக யானைப் பாகனாக இருந்து வந்துள்ளார்.

கரோனாவின் அடுத்த துயரம்: காலியான 70 ஆண்டுகால பாரம்பரிய காலிப் பை கடை!

இச்சூழலில் கடந்த 24 வருடங்களாக ’பல்லாட் பிரம்மதத்தன்’ எனும் யானைக்கு பாகனாக விளங்கி, அதனைப் பராமரித்து வந்த ஓமனசேட்டன், உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். திருவிழா காலங்களில் ஒய்யாரமாக நடந்து வரும் பிரம்மதத்தனுடன், ஓமனசேட்டனும் தனது வயது முதிர்ந்த காலத்தில் நடந்து வந்த கதை இதனால் முடிவினை எட்டியுள்ளது.

ஆனால் இந்தப் பிணைப்பும், பாகனின் அளப்பரிய அன்பும் தான் பிரம்மதத்தனை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது பாகனின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட யானை, அவரின் பூத உடலைக் கண்டு கண்ணீர் வடித்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

பாகனுக்காக கண்ணீர் விட்ட யானை

'எழுந்து வா' என்பது போல் பாகனை நோக்கி யானை பிரம்மதத்தன் மேற்கொண்ட செய்கை, அங்கிருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, அனைவரின் மனங்களையும் கனக்கச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details