புதுடெல்லி: மாலத்தீவு அமைச்சர்கள், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சித்து பதிவிட்டது அரசியல் வட்டாரங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியதை. அதனை அடுத்து பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்ட அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈஸ்மை ட்ரிப் (EaseMyTrip) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து பேசிதை கண்டித்தும், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், ஈஸ்மை ட்ரிப் நிறுவனம் அதன் மாலத்தீவு விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், மாலத்தீவிற்கு பதிலாக இந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் விதமாக விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. அது குறித்து அவர் X சமூக வலைத்தள பக்கத்தில், "லட்சத்தீவுகளில் உள்ள தண்ணீரும், கடற்கரைகள் மாலத்தீவு கடற்கரைகளை போன்ற அழகானவை. ஈஸ்மை ட்ரிப் தரப்பில் அந்த பகுதிகளை பிரமோட் செய்யும் விதத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான விவகாரம் அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவுகளை புறக்கணிக்கும் விதமான ஹாஸ்டாகுகல் (#BoycottMaldives) சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்திய சுற்றுலா ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில், 20 முதல் 25 நாட்களுக்குள், இந்த மாலத்தீவு புறக்கணிப்பின் வெளிப்படையாகத் தெரியவரும் எனத் தெரிவித்திருந்தது.