ரூர்கீ(ஹரித்வார்):பிரபல உணவக நிறுவனமான ’டோமினோஸ் பீட்சா’ நிறுவனம் சைவ பீட்சா டெலிவரி செய்வதற்குப் பதிலாக அசைவ பீட்சா டெலிவரி செய்ததால் ரூ.9 லட்சம் அபராதம் விதித்து ஹரித்வார் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மொத்த அபராதமாக ரூ.9 லட்சத்து 65 ஆயிரத்து 918 விதித்துள்ளது நுகர்வோர் ஆணையம்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஸ்ரீ கோபால் நர்சன் கூறுகையில், “ ரூர்கீ சாகேத் பகுதியைச் சேர்ந்த சிவாங் மிட்டால் என்பவர் ஆன்லைனில் சைவ பீட்சா, மற்றும் சாக்கோ லாவா கேக்கை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் அசைவ பீட்சா இருந்துள்ளது. அதைக் கடித்ததும் இதனையறிந்த மிட்டால் உடனே வாந்தி எடுத்துள்ளார். ஏனெனில் மிட்டாலும் அவரது குடும்பமும் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள். இதனால் அவரது மதநம்பிக்கையும் புண்படுத்தப்பட்டதாக அவர் கருதுகிறார்.