மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை, மும்பை ஐஐடி குழு ஆகியவை இணைந்து, புற்றுநோய்க்கான முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சையை, எலும்பு மஞ்சை மாற்று மையத்தில் கடந்த 4ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொண்டன. இச்சிகிச்சை மூலம் இந்த நாள் டாடா நினைவு மருத்துவமனைக்கும், மும்பை ஐஐடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நாளாக கருதப்படுகிறது.
முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவு!
மும்பை: மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.
இது ஒரு வகையான மரபணு சிகிச்சை. இதற்காக சிஏஆர்-டி செல்கள் மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிபொறியியல் துறையில் (Biosciences and Bioengineering) உருவாக்கப்பட்டன. இந்த ஆய்வுப் பணிக்கு உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் (Biotechnology Industry Research Assistance Council) பேஸ் திட்டத்தின் கீழ் ஒரு பகுதி நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப் பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரி தொழில்நுட்ப துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் ரூ.19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.