உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளா திருவிழாவுக்குச் சென்றுவருபவர்கள், கட்டாயமாக 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து டெல்லி அரசின் தலைமைச் செயலர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கும்பமேளாவுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 4 முதல் 17 வரை கும்பமேளா சென்றுவந்தவர்கள், அரசு இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
அதேபோல, இன்றுமுதல் ஏப்ரல் 30 வரை கும்பமேளாவுக்குச் செல்பவர்களும் தங்களது விவரத்தைப் பதிவிட வேண்டும். அப்போதுதான், கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிய முடியும். விவரங்களைப் பதிவிடாமல் மறைக்க நினைப்பவர்கள், தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு வாரங்கள் அனுப்பப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் இரண்டாயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:800 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் மாயம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்