ஹரித்வார்:டெல்லியைச் சேர்ந்த இளம்பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 27ஆம் தேதி, தனது முதலாளி அனில் தாகூர் உள்ளிட்ட சிலருடன் பணி நிமித்தமாக ஹரித்வார் சென்றுள்ளார். அங்கு அனைவரும் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு இரவு நேரத்தில் உணவு உண்ணும்போது, அனில் தாகூரும் அவரது நண்பர்களும் இளம்பெண்ணுக்கு மதுபானத்தை வற்புறுத்தி கொடுத்துள்ளனர்.
அதை குடித்ததும் இளம்பெண் மயங்கியுள்ளார். இதையடுத்து, அவளை அறைக்கு அழைத்துச் சென்று, அனில் தாகூரும், அவரது நண்பர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடிந்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.