தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்எஸ் தோனி பெயரில் ரூ.50 லட்சம் மோசடி செய்த கும்பல்

கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி பெயர்களை பயன்படுத்தி வங்கிகளில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டது.

எம்எஸ் தோனி பெயரில் ரூ.50 லட்சம் மோசடி செய்த கும்பல்
எம்எஸ் தோனி பெயரில் ரூ.50 லட்சம் மோசடி செய்த கும்பல்

By

Published : Mar 3, 2023, 2:27 PM IST

டெல்லி:கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்களின் அடையாளங்களை பயன்படுத்தி வங்கிகளில் பல லட்சம் ரூபாய் கணக்கில் மோசடி செய்யப்பட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குகளின் விவரங்களை சேகரித்தனர். அப்போது, கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி மற்றும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், சோனம் கபூர் ஆகியோரின் அடையாளங்களை பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பண மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, சினிமா பிரபலங்கள் சைஃப் அலி கான், ஆலியா பட், ஷில்பா ஷெட்டி மற்றும் பலரின் தனிப்பட்ட ஆவணங்களையும் தவறாகப் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஷாதாராவின் துணை போலீஸ் கமிஷனர் ரோஹித் மீனா கூறுகையில், இந்த பண மோசடியில் கொள்ளையர்கள் பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி பணத்தை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், புஸ்ஸாபூரில் உள்ள தெலுங்கானா கிராமினா வங்கியின் லாக்கர் அறைக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமிராங்களில் மாட்டாமல் முகத்தை மறைத்து சென்றுள்ளனர்.

அதன்பின் அங்கு இருந்த இரண்டு லாக்கர்களை உடைத்து, ஒரு லாக்கரில் இருந்த ரூ.4.4 கோடி ரொக்கத்தையும், மற்றொரு லாக்கரில் 8.3 கிலோ தங்கம் மற்றும் ரூ.7.3 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வங்கி தேசிய நெடுஞ்சாலை 44-க்கு அருகில் இருந்ததால் உண்மை தெரியவருவதற்குள் அவர்கள் எளிதாக தப்பிவிட்டனர்.

அதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மற்றொரு வங்கியில் தங்க கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொள்ளையிலும் இப்போது கைது செய்யப்பட்ட கும்பலே செய்துள்ளது. இந்த தங்கம் அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட்பேங்க் கிளையில் வைக்கப்பட்டிருந்தது.

வங்கியில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பான விசாரணையில் சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரியின் வீட்டில் இருந்து சுமார் 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தில் வங்கிக் கிளைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு தங்கத்தை கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்த கும்பலின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பிரபலங்களில் அடையாள அட்டையை எவ்வாறு பயன்படுத்தினர் என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது எனவும் ரோஹித் மீனா தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டையே உலுக்கிய பாரா படுகொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details