டெல்லி:அரியானா, குருகிராமை சேர்ந்தவர் சுவெந்து சேட்டர்ஜி. டெல்லி - குருகிராம் விரைவுச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதே சாலையில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார், சுவெந்து சேட்டர்ஜி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில், சுவெந்து சேட்டர்ஜி சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சொகுசு கார் ஓட்டுநரை கைது செய்தனர்.
சொகுசு கார் நம்பர் பிளேட்டில் வி.ஐ.பி. நம்பர் அச்சடிக்கப்பட்டு இருந்ததாலும், கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவலை போலீசார் வெளியிடாததாலும் மது போதையில் வி.ஐ.பி. யாரேனும் விபத்து ஏற்படுத்தினார்களா என சமூக வலைதளத்தில் பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.